வணக்கம் நண்பர்களே, வாருங்கள்,
மன நலத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது
மனசே மனசை கவனி (mind your mental health.com) என்ற நிறுவனத்திற்கு அன்னப் பறவையை சின்னமாக தேர்ந்தேடுத்துள்ளோம். அன்னப்பறவை ஒரு அழகான மற்றும் நளினமான பறவை. அது நீரில் செல்லும்போது மிகவும் சலனமின்றி அமைதியாக செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் நீருக்கடியில் இருக்கும் அதன் கால்களை மிக மிக வேகமாக அசைத்துக்கொண்டிருக்கும். இதை மனதிற்க்கு உருவக படுத்தி பாருங்கள். ஒருவர் வெளிப்புறத்தில் அமைதியாக காணப்பட்டாலும், மனதில் பல எண்ணங்கள் ஒடிக்கொண்டிருக்கலாம். மனம் அரோக்கியமாக இருப்பதற்க்கும் மன உறுதியையும் அமைதியையும் பேணுவதற்கும், சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் இயங்கும் மனம் தேவை. அதுவே அளவுக்கு அதிகமானால் நோயக மாறலாம்.
உங்களுக்கு தெரியுமா? உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியின்படி,
உலகில் எட்டு பேரில் ஒருவர் மனநலக் பாதிப்புடன் வாழ்கிறார்கள்.
அதனால்தான் மன ஆரோக்கியம் மற்றும் அதன் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், மனதின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, மனநலத் துறையில் நாற்பத்தைந்து வருட அனுபவமுள்ள மனநல மருத்துவர்களால் மனசே மனசை கவனி (Mind Your Mental Health) என்ற நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது
மனநல விழிப்புணர்வு
எங்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஒன்று, மனநலம் சார்ந்த இரண்டு யு-டியுப் (YouTube) சேனல்களை தொடங்கியுள்ளோம். எங்கள் வலைத்தளத்தைப் போலவே, நாங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் வீடியோக்களை வழங்குகிறோம். தமிழில் மனசே மனசை கவனி என்ற தலைப்பிலும் ஆங்கிலத்தில் Mind Your Mental Health என்ற தலைப்பிலும் இரண்டு யூ-டியூப் சேனல்களை ஆரம்பித்துள்ளோம். இது வரை தமிழில் 127 வீடியோக்களையும் ஆங்கிலத்தில் 14 வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளோம்.
மனநலப் பயிலரங்குகள் (Workshop) மற்றும் கருத்தரங்குகள்
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான கருத்துப் பட்டறைகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்கவிருக்கிறோம். சில நிகழ்ச்சிகளை இலவசமாகவும் மற்ற நிகழ்ச்சிகளை கட்டணத்துடன் வழங்குகிறோம்
மன அழுத்த மேலாண்மை (Stress Management), குடி நோய் பற்றிய போதையற்ற வாழ்க்கை என்ற கருத்துப் பயிலரங்குகள், குழந்தைகள் மன நலமும் மன வளர்ச்சியும், முதியோர் மனநலம், மனநோய்கள் பற்றிய விளக்க உரைகள் மற்றும் மண வாழ்க்கையில் நல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் கருத்து பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள் வழங்கவுள்ளோம். கூடிய விரைவில் இந்த நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்போது முன் அறிவிப்பினை பெற உங்கள் ஆர்வத்தைப் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யவும்.
New Title
மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களிடம் வரவிருக்கும் பல திட்டங்கள் உள்ளன. புதிய வெளியீடுகள் மற்றும் தகவல் பற்றிய அறிவிப்புகளுக்கு இப்போதே பதிவு செய்யவும்.