எங்களைப் பற்றி

மனசே மனசை கவனி (mindyourmentalhealth.com) என்ற நிறுவனம் மனநலத் துறையில் 45 வருட அனுபவமுள்ள மனநல மருத்துவர் சௌந்தரராஜன் அவர்களால் நிறுவப்பட்டது. மன ஆரோக்கியம் மற்றும் அதன் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நாங்கள் மனநல மருத்துவ குடும்பம்!

மரு. சௌந்தரராஜன் mindyourmentalhealth.com  என்ற நிறுவனத்தின்  நிறுவனர். அவர் மற்றும் அவரது மனைவி மரு. மல்லிகா இருவரும் மன நல மருத்துவர்கள்.

மரு. சௌந்தரராஜன் மனநலத்துறையில் நாற்பத்தி ஐந்து  வருட அனுபவம் கொண்டவர். இரண்டு  நாடுகளில் தனது அனுபவத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவில் 25 வருடங்கள் மனநல துறையில் இருந்து மனநல மருத்துவப் பேராசிரியராக விருப்ப ஓய்வு பெற்ற அவர், 2004 இல் இங்கிலாந்தில் மனநல மருத்துவர்களுக்கான பெரும் ஆட்சேர்ப்பு நெருக்கடி ஏற்பட்டபோது இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அவர் இருபது ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் தேசிய நல்வாழ்வு துறையில் (National Health Services – NHS) மனநல மருத்துவராக (Consultant Psychiatrist)  பணியாற்றினார்

 

மரு.மல்லிகா மனநல மருத்துவத்தில் 40 வருட அனுபவமிக்க ஒரு மனநல மருத்துவர். அவர் தனது பணியினை 21 ஆண்டுகள், இங்கிலாந்திற்கு இடம் குடிபெயர்வதற்கு முன், சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள மனநல மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். அவர் 2005 இல் இங்கிலாந்தில் தேசிய நல்வாழ்வு துறையில் (National Health Services – NHS) ஒரு மனநல மருத்துவராக (Consultant Psychiatrist) பொறுப்பேற்றார்.  

 

மனநலம் குறித்த அவர்களின் ஆர்வம் அவர்களின் மகள்களுக்கும் கடத்தப்பட்டுள்ளது. மரு. சுதா சௌந்தரராஜன் ஒரு மனநல மருத்துவர்  ஆவார்.  அவர் தனது உயர் பயிற்சியை முடித்து, இங்கிலாந்தில் மனநல மருத்துவர்  (Consultant Psychiatrist) பதவிக்கு தயாராகி வருகிறார், மேலும் அவர்களது இளய மகள் மரு. வினிதா சௌந்தரராஜன் தற்போது மனநல மருத்துவராக உயர்கல்வி படித்து வருகிறார்.